நீரூற்று

வாழ்க்கைப் பயணங்கள் அனைத்தும் ஒரு நீரூற்றைப் போன்றானதொன்றேயென எப்பொழுதும் நம்பும் நான், அவ்வூற்றின் வழி பிறந்த அந்த ஓடையினூடே பயணிக்கும் என் எண்ணங்களை, எண்ணக் குவியல்களை எழுத்தென்னும் தூரிகையால் வண்ணக் குவியல்களாக்கி உங்கள் பார்வைக்கு வைக்க விழைகிறேன்!

என் எழுத்துக்களினூடே எப்போழுதும் உங்களுக்கு உடன்பாடு தோன்றாதிருக்கலாம்! அப்படி தோன்றவேண்டுமென்ற அவசியமும் ஒருபோதுமிருப்பதாக நான் எண்ணுபவனும் அல்ல! உடன்பாடுகளூடே இயன்ற மட்டும் முரண்பாடுகளும் இருந்தால்தான் வாழ்க்கைப் பயணம் இனிமையானதொன்றாக இருக்கக் கூடும்!

முரண்பாடுகள் தோன்றும்போதெல்லாம் இவ்வோடை தன் பாதையிலிருந்து விலகிச் சென்று வேறு பாதையில் ஓடிவிடாதபடி கரையோரங்களில் நீங்கள் கனமாய், கவனமாய் கருத்துச் சுவர்களை எழுப்பி வைக்கலாம்! ஆயினும் அச்சுவர்கள் ஓடையின் இயல்பை மாற்றிவிடாதிருக்கட்டும்!

எழுத்தின் இயல்புகளை, வடிவங்களை வாசித்தும், சுவாசித்தும் இருந்திருந்த எனக்குப் "பகலவன் பிரமீளா" என்ற புனைப்பெயரொன்றைச் சூட்டி கைபிடித்து வலையுலகின் வடம்பிடிக்க வைத்த நேசமிகு அன்பர்

அவர்களின் அன்புடனும், ஆசியுடன் உங்களுடனான உரையாடல்களைத் தொடங்க இருக்கிறேன்!

வலையுலகு என்னை வாஞ்சையுடன் தழுவிக்கொள்ளும் என்று நம்புகிறேன்!

இப்படிக்கு,
பகலவன் பிரமீளா!

5 comments:

துபாய் ராஜா July 1, 2009 at 6:11 PM  

முதல் தழுவல் நம்முடையதாக இருக்கட்டும்.

வலையுலக வரவிற்கு வாழ்த்துக்கள்.

Anonymous July 1, 2009 at 10:14 PM  

Nice Layout cached the eyes.The color is my favorite.I welcome your entry and wish you-vimalavidya-Chalakuddy

☀நான் ஆதவன்☀ July 1, 2009 at 11:45 PM  

வாழ்த்துகள் அண்ணே

Kumky July 2, 2009 at 4:57 AM  

டெம்ப்ளேட்டும், மேட்டரும் அருமை.
நீங்களும் தீவிர எளக்கியத்துக்குள்ர குதிச்சுபோட்டாப்ல இருக்கு.லேசா வயத்த கலக்குது.நல்லாருங்க எசமான்.

நட்புடன் ஜமால் July 2, 2009 at 9:09 AM  

இன்னும் இன்னும்

எத்தனை ப்லாக் அண்ணே

எங்கட பதிவு லிஸ்ட்ட வீட உங்கட ப்லாக் லிஸ்ட் ஜாஸ்தி


வருக வருக வாழ்த்துகள்