ஒருபோதுமென்னைத்
தாக்கியதில்லை
பிரிவுகளின் துயர்களும்
பிரிவுகளின் நினைவுகளும்!
அருகாமைப் பொழுதுகளனைத்துமே
நினைவூட்டிய வண்ணம்தான்
இருந்திருக்கின்றன!
தொலைவுகளில் செல்லக்கூடிய
கணங்களையும் சந்திக்க நேருமென்று!
விடியாத நீண்ட
இரவுப் பொழுதுகளின்
நீட்சிகள்
விழிகளில் தரும்
அயற்சியையும் மீறி
ஏதோ உன்னைப்
பற்றிய
எண்ணவோட்டங்களை
என்னுள்ளே ஏற்படுத்திவிட்ட
தடங்களின் தடுமாற்றங்களை
கவனித்து
குறிப்பெடுத்துக் கொண்டுதானிருக்கின்றன
என் மூளைக்குள் செல்லும்
ரத்த நாளங்கள்!
நினைவுகளின்
வீரியங்கள்
என்னை
வீழ்த்திவிடப் போவதில்லை!
என்னை எப்பொழுதும்
நான்
இழந்துவிடாமதிருப்பதனால்!
வீரியங்கள்
Posted by
பகலவன் பிரமீளா
Wednesday, July 1, 2009
Labels: கவிதை
4 comments:
வலைப்பதிவுலகுக்கு வரவேற்கின்றோம் வாழ்த்துக்களுடன்....!
//"அருகாமைப்
பொழுதுகளனைத்துமே
நினைவூட்டிய வண்ணம்தான்
இருந்திருக்கின்றன!
தொலைவுகளில் செல்லக்கூடிய
கணங்களையும் சந்திக்க நேருமென்று!"//
அருமையான வரிகள்.
குதிச்சிட்டீங்க.நல்லா குமுறுங்க.
வரவேற்புடன் வாழ்த்துக்களும்.
ஹப்பா நினைவுகளுக்கு இத்தனை வீரியமா? நினைவுகளையே இப்படி நேசித்தால் நிஜத்தை?
ஆரம்பமே காதலின் வண்ணம் சொல்கிறது பிரிவோ தூரமோ இரண்டுமே சுகமாக்கப்பட்டிருக்கிறது வரிகளால்....
நினைவுகளில் தாகமும் தாக்கமும் அதிகம்...பாராட்டிக் கொண்டேயிருக்க தோன்றுகிறது பகலவனே... உன் வெளிச்சம் வேண்டி......
உங்களின் இந்த பதிவு தமிழ் மலர் செய்திகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.
vist தமிழ்மலர்
Post a Comment